திண்டுக்கலில் முடிவுற்ற பணிகளை, அமைச்சர் தொடங்கி வைப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

திண்டுக்கலில் முடிவுற்ற பணிகளை, அமைச்சர் தொடங்கி வைப்பு.

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கர பாணி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.2.02 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.7.60 கோடி  மதிப்பீட்டில் புதிய திட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில், நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, ரூ.2.02 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.7.60 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

 
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், சிந்தலப்பட்டி ஊராட்சி சிந்தலப்பட்டியில் பாராளுமன்ற ஊறுப்பினர் நிதியிலிருந்து ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், ஓடைப்பட்டி ஊராட்சி கொங்கபட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.11.77 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை, குத்துலுப்பை ஊராட்சி குத்துலுப்பையில் 15-வது நிதிக்குழு திட்டத்தில் ரூ.48.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், எல்லைப்பட்டி ஊராட்சி அண்ணாநகரில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.50.00 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், புலியூர்நத்தம் ஊராட்சி முத்துநாயக்கன்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.11.77 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை, வெரியப்பூர் ஊராட்சி வெரியப்பூரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.11.77 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை, வெரியப்பூர் ஊராட்சி நாகப்பன்பட்டியில்  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.8.67 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை, ஜவ்வாதுபட்டி ஊராட்சி ஜவ்வாதுப்பட்டி புதூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை என, மொத்தம் ரூ.2.02 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


மேலும், ஓடைப்பட்டி ஊராட்சி சக்கம்பட்டியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, குத்துலுப்பை ஊராட்சி குத்துலுப்பையில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.39.35 இலட்சம் மதிப்பீட்டில் ஐ.அத்தப்பன்பட்டி சாலை முதல் கள்ளன்தோட்டம் வெங்கடாபுரம் சாலை பணிகள், மார்க்கம்பட்டி ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.27.24 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளப்பட்டி சாலை முதல் மார்க்கம்பட்டி – மூலனூர் சாலை பணிகள், மார்க்கம்பட்டி ஊராட்சியில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.34.79 இலட்சம் மதிப்பீட்டில் மார்க்கம்பட்டி – மாம்பாறை சாலை முதல் எம்.அய்யம்பாளையம் – வடுகபட்டி சாலை பணிகள், சின்னக்காம்பட்டி ஊராட்சி நாரயப்பநாயக்கன்பட்டியில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம், சின்னக்காம்பட்டி ஊராட்சி கோமாளிபட்டி காலனியில், நமக்குநாமே திட்டத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம், சின்னக்காம்பட்டி ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.36.64 இலட்சம் மதிப்பீட்டில் கள்ளிமந்தையம் – இடையகோட்டை சாலை முதல் நாரணப்ப- நாயக்கன்பட்டி சாலை பணிகள்,  இடையகோட்டை ஊராட்சி இடையகோட்டையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் பயணியர் நிழற்குடை, இடையகோட்டை ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.109.43 இலட்சம் மதிப்பீட்டில் எழுவன்பாறை இ.அய்யம்பாளையம் சாலை முதல் ஜவ்வாதுபட்டி சாலை பணிகள், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.38.79 இலட்சம் மதிப்பீட்டில் தாடிக்கொம்பு – பள்ளப்பட்டி சாலை முதல் நங்காஞ்சி டேம் வரை சாலை பணிகள், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில்  ரூ.36.64 இலட்சம் மதிப்பீட்டில் கள்ளிமந்தையம் – இடையகோட்டை சாலை முதல் நாரணப்பநாயக்கன்பட்டி வரை தார்சாலை பணிகள், வலையப்பட்டி ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில்  வலையபட்டி முதல் வலையபட்டி – கருமலை சாலை பணிகள், ஜோகிப்பட்டி ஊராட்சி ஜோகிபட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பாலமரம் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை, முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.29.42 இலட்சம் மதிப்பீட்டில் ஜவ்வாதுபட்டி – சோழியப்பகவுண்டனூர் சாலை முதல் பாறையூர் ஆதிதிராவிடர் காலனி வரை தார்சாலை பணிகள், புளியமரத்துக்கோட்டை ஊராட்சி நாகப்பனூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் அமைக்கும் பணிகள், புளியமரத்துக்கோட்டை ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில்  ரூ.28.79 இலட்சம் மதிப்பீட்டில் பெரியபட்டி -  விராலிப்பட்டி சாலை முதல் ஒட்டநாகம்பட்டி- தம்மனம்பட்டி சாலை பணிகள், புளியமரத்துக்கோட்டை ஊராட்சி பூவாயிபாளையத்தில்  முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில்  ரூ.32.37 இலட்சம் மதிப்பீட்டில பூவாத்தாள் கோவில் முதல் கோடாங்கிபட்டி சாலை பணிகள், புளியூர்நத்தம் ஊராட்சி புலியூர்நத்தத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.00 மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் காலனியில் கலையரங்கம் அமைக்கும் பணிகள், இளந்தாரியூரில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.30.00 மதிப்பீட்டில் புதிய சமுதாய கூடம் அமைக்கும் பணிகள், கேதையுறம்பு ஊராட்சி பழையபட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிகள், கேதையுறம்பு ஊராட்சி கொள்ளப்பட்டி பிரிவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிகள், போடிகுண்டூரில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கூடம் அமைக்கும் பணிகள், ஜவ்வாதுபட்டி ஊராட்சி பருமரத்துப்பட்டியில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.20.00 மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் காலனியில் புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் பணிகள்,  வடக்கு ஆதிதிராவிடர் காலனியில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் பணிகள், கிழக்கு ஆதிதிராவிடர் காலனியில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் பணிகள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூ.27.06 இலட்சம் மதிப்பீட்டில் வெண்ணைகாரர் வீடு முதல் அய்யம்பாளையம் ஓடை வரை மெட்டல் சாலை அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.7.60 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சிகளில்,  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி  பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின, தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வராக திகழ்கிறார். தமிழத்தை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். 


தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை தொடர்ந்து, நிறைவேற்றி வருகிறார். மகளிர் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். சிந்தலப்பட்டி ஊராட்சியில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு இருக்கிறது. மேலும், திருமண நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  


ஆதிதிராவிடர் மக்களுக்கு சுமார் 4 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 100 ஆதிதிராவிடர் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டு, அவர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் விரைவில் கட்டிதரப்படும். மேலும், நமக்கு நாமே திட்டத்தில் பல்வேறு இடங்களில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வருகிறது. 


தமிழ்நாடு முதலமைச்சர், தற்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் இந்த ஊராட்சியல் 658 குடும்ப அட்டைதாரர் உள்ளனர். இதில், 456 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்துள்ளார்கள். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் இ-சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டும். தகுதி உடைய அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை  வழங்கப்படும். முதலமைச்சர், ஆட்சிக்கு வந்த உடனே கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த 2 கோடி 9 இலட்சம் மக்களுக்கு ரூ.4000 வழங்கினார். மகளிருக்கு நகர பேருந்தில் கட்டணமில்லா பயண சேவை வழங்கப்பட்டு வருகிறது. 


முதியோர் உதவித்தொகை ரூ.1000 லிருந்து ரூ.1200 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பியலாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும். உருவாக அடித்தளமாக "புதுமைப் பெண்" என்னும் உன்னத திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 


அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 31,000 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 18.50 இலட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். ஒட்டன்சத்திரம், பழனி சட்டமன்ற தொகுதிக்கு காவிரி நீர் ஆதாரத்தைக்கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ.1000 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. 


இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் வரும் 30 ஆண்டு காலங்களுக்கு இங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. அந்த வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பெண்கள் படிக்கின்ற 2 கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அடுத்தாண்டு ஒட்டன்சத்திரத்தில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். உயர்கல்வித்துறையின் மூலமாக ஆண்கள் பெண்கள் படிக்கின்ற அரசு கல்லூரி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. விருப்பாட்சியில் தொழிற் பயிற்சி கல்லூரி ரூ. 7 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. 


காளாஞ்சிபட்டியில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு நடத்தும் போட்டி தேர்வுக்காக தயார் செய்ய பயிற்சி மையம் அமைய உள்ளது. ஆட்சிப்பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் தமிழகத்தில் இதுவரை சுமார் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் என நியாயவிலை கடைக்குச் செல்ல முடியாதவர்கள், பொருட்கள் வாங்க வேறு ஒரு நபரை நியமித்து விண்ணப்பம் அளித்தால், அந்த நபரிடம் பொருட்கள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் 1.50 இலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பரப்பலாறு அணை தூர்வார வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை ஏற்று இப்பணிகள் நடைபெற விரைவில் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு பணிகள் தொடங்கப்படவுள்ளது. 


இந்த ஊராட்சிகளில் சுமார் 55 பணிகள் ரூ.1.45 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது. குடிநீர், தெருவிளக்கு வசதி, கல்வி, பேருந்து வசதி, சுகாதாரம், சாலை வசதி, உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 


இன்றைய தினம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் சிந்தலப்பட்டி, ஓடைப்பட்டி, குத்திலுப்பை, எல்லப்பட்டி, மார்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, இடையகோட்டை, வலையபட்டி, ஜோகிபட்டி, புளியமரத்துக்கோட்டை, புலியூர்நத்தம், கேதையுறம்பு, வெரியப்பூர், ஜவ்வாதுபட்டி ஆகிய பகுதிகளில் ரூ.2.02 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.7.60 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது  தமிழ்நாடு முதலமைச்சர், அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என,  உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர்  பேசினார்.


இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  பெ.திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் சௌ.சரவணன், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்  மு.அய்யம்மாள், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி, ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர் ஜோதிஸ்வரன் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/