கள்ளக்குறிச்சி பெரிய ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம், இறந்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 செப்டம்பர், 2023

கள்ளக்குறிச்சி பெரிய ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம், இறந்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.


கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகராட்சியில் சங்கராபுரம் சாலையில் பெரிய ஏரி உள்ளது. இந்த பெரிய ஏரியில் கடந்த சில வாரங்களாக மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. ஏரியில் ஓரளவிற்கு நீர் இருந்த போதிலும் ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதப்பது புரியாத புதிராக உள்ளது. சுமார் ஐந்து கிலோ வரை உள்ள மீன்களெல்லாம் செத்து மிதக்கிறது. 

ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் கள்ளக்குறிச்சியிலிருந்து சங்கராபுரம் சாலையில் செல்லும் பொது மக்களுக்கும், அந்த பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கும் துர்நாற்றத்தால் தொந்தரவு ஏற்பட்டு வருகிறது. எனவே ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி குழி தோண்டி புதைக்க பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/