உலக ஓசோன் பாதுகாப்பு தினம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

உலக ஓசோன் பாதுகாப்பு தினம்


மெப்கோ ஸ்லெங்க் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில்  உலக ஓசோன் பாதுகாப்பு தினம் பற்றிய விழிப்புணர்வு   நடத்தப்பட்டது. பள்ளி முதல்வர்  ப.லாவண்யா  தலைமையில்  மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி மக்களுக்கு விழிப்புணர்வை  ஏற்படுத்தினர். 


மேலும் அளவுக்கு அதிகமான நெகிழி பயன்பாடு, வாகன புகை, குளிர்சாதன பெட்டி மற்றும் குளிரூட்டும் சாதனம் மூலம் வெளிப்படும் குளோரோ  ஃபுளுரோ கார்பன் ஓசோன் படலத்தில் துவாரத்தை அதிகப்படுத்துகிறது. இதை அறிந்து வருங்காலத்தை மக்கள் இதன் பயன்பாடுகளை குறைத்து ஓசோன் படலத்தை காக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். பல்வேறுவகையான மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டு வைத்து ஓசோன் படலத்தை காக்க உறுதிமொழி ஏற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/