பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். ஊத்தங்கரை பேரூராட்சித் தலைவர் அமானுல்லா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில், தி.மு.க., நகர செயலாளர் பாபு சிவகுமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் கதிர்வேல், சாதிக் பாஷா, ஒன்றிய அவைத் தலைவர் தணிகை குமரன், பி.டி.எ., தலைவர் கண்ணாமணி, கல்வி செயலாளர் ஜெயராமன், வட்டார கல்வி அலுவலர் மாதம்மாள், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் வசந்தி, பள்ளி ஆசிரியர்கள் சக்தி, உமா, சரண்யா, சத்துணவு அமைப்பாளர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர், பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக