காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கரம்பூரில் உடைந்த குமுளி மதகை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 செப்டம்பர், 2023

காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கரம்பூரில் உடைந்த குமுளி மதகை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில்அருகே கீழக்கடம்பூர் கிராமத்தில்  குமுளி மதகுமூலம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி விவசாயிகள் பாசனம் பெற்று வருகின்றனர் . இந்த குமுளி மதகானது மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட இயற்கையான முறையில் மேட்டுப்பகுதிக்கு தண்ணீர் செல்லும் மதகாகும். பெரிய வாய்க்காலுக்கு இடையில்  கடந்து மறுபக்கத்தில் உள்ள மேட்டுப்பகுதி பாசனத்திற்கு இதன் மூலம் தண்ணீர் செல்கிறது. 


இதனால் கீழக்கடம்பூர் மற்றும் இதனை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு மேட்டுப்பகுதி விவசாய விளைநிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்த பாசன மதகு அமைக்கப்பட்டு நூறு ஆண்டுகள் கடந்துவிட்டதால் தற்போது முழுமையான அளவில் இது சேதம் அடைந்துள்ளதால்  குமுளி மதகுக்கு வரும் தண்ணீர் அதன் உடைந்த பகுதிகள் வழியாகபெரிய வாய்க்காலில் விரயமாகி கலக்கிறது. 


இதன் மூலம் மேட்டுப்பகுதியில் உள்ள 200 ஏக்கர் விவசாய விளை நிலங்களில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்கள் நாற்றுகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதை உடனடியாக கவனத்தில் எடுத்து சரி செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/