பொன்-புதுப்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் அறம் ஆண்டின் சிறப்பு நிகழ்வான தனித்திரு பயிலரங்கம் பொன் புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

பொன்-புதுப்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் அறம் ஆண்டின் சிறப்பு நிகழ்வான தனித்திரு பயிலரங்கம் பொன் புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, பொன் -புதுப்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் அறம் ஆண்டின் சிறப்பு நிகழ்வான தனித்திரு பயிலரங்கம், பொன் -புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு, பொன்னமராவதி  ரோட்டரி சங்கத்தின் தலைவர் முனைவர் முடியரசன் தலைமை தாங்கினார். செயலாளர் மெ.இராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.


வளரிளம் பெண்களுக்கான தனித்திரு தலைமைப் பண்புப் பயிலரங்கத்தின் நோக்க உரையை சி.சு.முருகேசன் வழங்கினார். தலைமைப்பண்பை வளர்த்துக் கொள்ளத் தேவையான முயற்சிகளையும் அதனைத் தக்க வைத்துக் கொள்ளும் பயிற்சிகளையும் விளக்கி பேராசிரியர் சர்மிளா தேவி அவர்கள் கருத்துரை வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி நிர்மலா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.


நிகழ்வில் பொருளாளர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர்கள் ஆர்.யூ.ராமன், இ.குமாரசாமி, கி.ரமேஷ், முத்துக்குமார், சுகதேவன், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக மேனாள் தலைவர் முரளிதரன் நன்றியுரை கூறினார். நிகழ்வில் பங்கேற்ற மாணவிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad