திருமங்கலம் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

திருமங்கலம் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

திட்டமிட்டு அம்மா உணவகத்தை முடக்குவதில் திமுக அரசு தொடர்ந்து செயல்படுகிறது பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்புணர்ச்சியாக பார்க்கப்படுகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேட்டி, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மழையால் சேதமடைந்த வீடுகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு நிவாரணம் வழங்கினார்.


திருமங்கலம் அருகே உள்ள தங்களாச்சேரி கிராமத்தில் தொடர்ந்து இரு தினங்களாக பெய்த மழைக்கு தங்களாச்சேரியில் பெருமாள் மனைவி முத்தம்மாள் மற்றும் கார்த்திகைசாமி மனைவி பெத்தம்மாள் ஆகியோரின் வீடுகள் இடிந்து விழுந்தது பகல் வேலையாக இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தார்.


தொடர்ந்து இடிபட்ட வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி மற்றும் நிவாரண உதவித் தொகை வழங்கினர் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறும் போது, திருமங்கலம் தொகுதி திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் வந்ததால் தங்களாச்சேரி கிராமத்தில் இரண்டு மண் வீடுகள் இடிந்து இருக்கிறது உயிர் சேதம் இல்லாமல் தப்பித்து இருப்பது கடவுள் செயல் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் மேலும் வில்லூர் மின்வாரிய அலுவலர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் காப்பாற்றினர்.


இதேபோல விவசாயி பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதால் விவசாய நிலங்கள் பழகி உள்ளது பேரிடர் நிவாரண நிதியில்  இருந்து திருமங்கலம் தொகுதிக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரணம் வழங்க தெரிவித்தார் அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி மற்றும் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.


திருமங்கலம் அம்மா உணவக ஊழியர்கள் சம்பளம் வழங்காதால் போராட்டம் குறித்த கேள்விக்கு, திட்டமிட்டு உணவத்தை முடக்குவதில் திமுக அரசு தொடர்ந்து செயல்படுகிறது ஏற்கனவே பல கட்ட போராட்டம் நடத்தி உள்ளோம் நேற்று அவர்கள் போராட்டம் நடத்தியது கவனத்திற்கு வந்தவுடன் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் கால் புணர்ச்சியாக பார்க்கப்படுகிறது ஏழை மக்கள் உழைக்கிற மக்களுக்கு உரிய  சம்பளத் தொகையை கொடுக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/