திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம். எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 செப்டம்பர், 2023

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம். எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.


திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள் உள்பட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்திரவிட்டுள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கட்சியின் நிர்வாக வசதிக்காக திருவண்ணாமலை மாவட்டத்தை திருவண்ணாமலை வடக்கு/தெற்கு என செயல்பட்டு வந்த மாவட்ட அமைப்புகள் இன்று முதல் ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் இரண்டு சட்டமன்ற தொகுதிகள் வீதம் திருவண்ணாமலை கிழக்கு, மத்திய, வடக்கு மற்றும் தெற்கு ஆக பிரிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, வடக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன், (செய்யார் மற்றும் வந்தவாசி), தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி (கலசப்பாக்கம் மற்றும்  செங்கம்), மத்திய மாவட்ட செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசுதா (போளூர் மற்றும் ஆரணி), கிழக்கு மாவட்ட செயலாளராக எஸ்.ராமச்சந்திரன் மற்றும் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை  மாவட்ட செயலாளராக பெருமாள் நகர் கே.ராஜன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


- அ.மு.முஸ்தாக்அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad