திருமங்கலம் வேங்கடசமுத்திரத்தில் அமைந்துள்ளது காட்டுபத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிசேகம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

திருமங்கலம் வேங்கடசமுத்திரத்தில் அமைந்துள்ளது காட்டுபத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிசேகம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் வேங்கடசமுத்திரத்தில் அமைந்துள்ளது காட்டுபத்திரகாளியம்மன் கோவில். இந்த கோவிலில் இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு பின்பு கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேகபணிகள் தொடங்கின. 


இதனை யொட்டி புதியதாக சிவபெருமான் சன்னதி, கருமாரியம்மன் சன்னதி மற்றும் மடப்பள்ளி அமைக்கப்பட்டது. 31-ந்தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது. செப்டம்பர் 1-ந்தேதி முதல் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடந்தது. இன்று திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவில் சிவாச்சாரியார் சங்கர நாராயணபட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்தனர். காலை 6.20 மணிக்கு காட்டுபத்திர காளியம்மன் கோவில் கோபுரவிமானத்தில் சிவாச்சாரியார்கள் வேத மத்திரங்கள், மேளதாளங்கள் முழங்க புனிதநீர் ஊற்றி கும்பா பிஷேகம் நடத்தினர். 


இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை ஆணையாளர் செல்லத்துரை, காட்டுபத்திர காளியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி அங்கையர் கன்னி, தர்க்கார் சர்க்கரை அம்மாள், ஆய்வாளர் சாந்தி கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மதுரை  புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் அய்யப்பன் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டது.


இதில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக பொருளாளர் மூ.சி.சோ. ஆ.ரவி, திருமங்கலம் நகரச் செயலாளர் ராஜாமணி அவைத்தலைவர் காளிதாஸ் நகர துணைத் செயலாளர் விஜயபாண்டி பாரிஸ் ரவி முஸ்தபா ரபீக், சுந்தரம், முத்துக்குமார், தன பாண்டி, டிராவல்ஸ்பாண்டி, ஆட்டோ சக்தி முனி பாலன் அழகர் முனியாண்டி பவுனு  கார்த்திக், உசிலை நகரச் செயலாளர் சசி ஒன்றிய செயலாளர் ஜான்சன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் போத்தி ராஜா அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகை சாமிமற்றும் நகர சார்பு அணி செயலாளர் நகர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/