தண்ணீர் இன்றி கண்ணீரில் தவிக்கும் காவிரி டெல்டா "கருகும் குறுவை" "பொய்க்கும் சம்பா" டெல்டா முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா? - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

தண்ணீர் இன்றி கண்ணீரில் தவிக்கும் காவிரி டெல்டா "கருகும் குறுவை" "பொய்க்கும் சம்பா" டெல்டா முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ஏ.கே ஆர்  ரவிச்சந்தர் செய்தியாளர்களிடம்  பேசியதாவது காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் கருவுற்ற குறுவைப் பயிர்கள்  கருகும் நிலையில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க முடியாது என அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு தலையில் இடி விழுந்தது போல பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவையும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் முற்றிலும் கர்நாடக அரசு நிராகரித்து உள்ளது மிகவும் வேதனையாக உள்ளது.


மேட்டூர் அணையின் நீர் இருப்பு 44 அடியாக உள்ள நிலையில் இன்னமும் எட்டு நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது நடவு செய்து 50 அல்லது 60 நாட்கள் ஆன நெற்பயிர்கள் ஐந்து முறை தண்ணீர் பாய்ச்சினால் தான் நெல்மணிகள் முற்றி அறுவடை செய்ய முடியும் காஞ்சி கெடுக்கும் அல்லது பேஞ்சு கெடுக்கும் காப்பீடு திட்டத்தை கெஞ்சி கேட்டோம் பெரும்பாலும் குறுவை சாகுபடியில் இயற்கையோடு போராடுகிறோம் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துங்க என்று தொடர்ந்து மன்றாடினோம் ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக குறுவை நெற்ப்பயிர்களுக்கான பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட்டது தற்போது குறுவைப் பயிர்கள் கருகும் சூழ்நிலையில் பயிர் காப்பீடு திட்டம் இல்லாததால் விவசாயிகளுக்கு பெருத்த நட்டமும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் ஒரு ஏக்கர் பிரிமியம் தொகை விவசாயிகள் ரூபாய் 480 செலுத்தும் போது தமிழ்நாடு அரசும் இந்திய ஒன்றிய அரசும் ரூபாய் 7500 பங்களிப்பாக செலுத்தி ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு பிரிமியம் ரூபாய் 8000 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செலுத்தி கடந்த நான்கு ஆண்டுகளாக காப்பீடு இழப்பீடு தொகைகளை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கவில்லை இந்நிலையில் சில மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் வரை ஊக்கத்தொகையாக  வழங்கப்பட்டு வருகிறது உதாரணமாக தெலுங்கானா ஒரு ஏக்கருக்கு ரூபாய் பத்தாயிரம் ஒடிசா ரூபாய் பத்தாயிரம் ஆந்திரா ரூபாய் 12500 மேற்குவங்கம் ரூபாய் பத்தாயிரம் சத்தீஸ்கர் ரூபாய் 15,000 இது போல அண்டை மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும்போது பிரதமரின் கௌரவ உதவித்தொகை ஒரு ஆண்டுக்கு மூன்று தவணையாக 6 ஆயிரம் வழங்கும் போது மேற்கண்ட தொகைகளை சேர்த்து உதாரணமாக சத்தீஸ்கர் ஒரு ஏக்கருக்கு 15,000 பிஎம் கிஷான் ரூபாய் 6000 இரண்டையும் சேர்த்து 21,000 கிடைப்பதால் இது போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து விவசாயிகள் மீள முடியும் கருகும் குறுவை பொய்க்கும் சம்பா -டெல்டா கார முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் குறுவை முற்றிலுமாக தண்ணீர் இன்றி கருகும் நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து பேரிடர் நிவாரண நிதியாக ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/