புரட்சிகர மாணவர் இளைஞர் அணி சார்பில் மாணவி அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு நீட் தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

புரட்சிகர மாணவர் இளைஞர் அணி சார்பில் மாணவி அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு நீட் தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் அணி சார்பில் நீட் தேர்வுக்கு முடிவு கட்ட காத்திருக்கிறது மெரினா என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில இணை செயலாளர் பால்ராஜ் தலைமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வினால் உயிர்நித்த மாணவி அனிதா அவர்களின் நினைவு நாளை நினைவு கூறும் வகையில் அனிதா அவர்களின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு மரியாதை செலுத்தப்பட்டது.


பின்னர் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி  கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது நிகழ்ச்சியில் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் அதிகாரம் ,திராவிட கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ,இந்திய மாணவர் சங்கம், திராவிட விடுதலைக் கழகம் ,தந்தை பெரியார் திராவிட கழகம், மறுமலர்ச்சி திராவிட கழகம், தமிழக மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


- குறிஞ்சிப்பாடி செய்தியாளர் தே.தனுஷ் - 8667557062

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/