பொன்னமராவதி ஒன்றியத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் இரத்த சோகை விழிப்புணர்வு நடத்தப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

பொன்னமராவதி ஒன்றியத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் இரத்த சோகை விழிப்புணர்வு நடத்தப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் கர்ப்பிணி பெண்கள், சுய உதவிக் குழுவினர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை பணியாளர்களுக்கு சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகளின் தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் இரத்த சோகை சம்மந்தப்பட்ட விழிப்புணர்வு வழங்கப்பட்டது. 


புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா உத்தரவின்படி மாவட்ட திட்ட அலுவலர் புவனேஸ்வரி அறிவுறுத்தலின்படி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சியாமலா ஆலோசனையின்படி கருப்புக்குடிப்பட்டி, தேவம்பட்டி, வார்பட்டு, அனைத்து குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் இரத்த சோகை விழிப்புணர்வில் கர்ப்பிணி தாய்மார்கள் உட்கொள்ளும் ஆரோக்கிய உணவு, தாய்ப்பால் ஊட்டச்சத்து, உடல் பருவநிலை கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் கர்ப்பமான பெண்கள் 270 நாட்கள் முதல் குழந்தை பிறந்த ஆறாவது மாதம் 180 நாட்களிலிருந்து இரண்டு வயதிற்கு 550 நாட்கள் என மொத்தம் ஆயிரம் நாட்கள் பொன்னான நாட்கள் என்றும் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 0-6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, தாய் உட்கொள்ளும் உணவு முறைகள் பற்றிய விழிப்புணர்வை கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் விளக்கி கூறினர். 


இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர் அருண் சூர்யா, வட்டரா மேற்பார்வையாளர் நிலை ஒன்று, இரண்டு, அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஊட்டச்சத்து உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர்,புதுக்கோட்டை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/