வாலாஜா அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் நிர்வாகத்திரின் ஊழலை கண்டித்து, முன்னாள் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

வாலாஜா அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் நிர்வாகத்திரின் ஊழலை கண்டித்து, முன்னாள் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட அணைக்கட்டு ரோடு கோனேரி செட்டி  தெருவில் அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயக திருக்கோயில் செயல்பட்டு வருகிறது இந்த கோவிலில்  100 க்கும் மேற்பட்ட செட்டியார் குடும்பங்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.


இந்தக் கோயில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது   100க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும்  பல  கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன    கடந்த 20 வருடங்களாக பரமசிவன் என்பவர் தலைவராக  செயல்பட்டு வந்தார்  தற்பொழுது தற்போது கோபிசெட்டியார் தலைவராக பணியாற்றி வருகிறார்.


இந்த நிலையில் கோபிசெட்டியாரை தலைவராக வைத்துக் கொண்டு, சண்முகம்,  சதாசிவம் , மற்றும் வேலூர் செட்டியார் ஆகியோர் இணைந்து பல கோடி ரூபாய் ஊழல் செய்ததை கண்டுபிடித்து முன்னாள் தலைவர் பரமசிவம் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர்  கோயில் நிர்வாகிகளிடம் கேள்வி கேட்டனர் அவர்கள் சரியான பதில் சொல்லாத காரணத்தினால் கோவிலுக்கு முன்பாக திரண்டு வந்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முன்னாள் கோவில் நிர்வாகிகள் பேசும் போது கோவிலுக்கு சொந்தமான இரண்டு  கடைகளை தற்போது உள்ள நிர்வாகிகள்  வேலு மற்றும் சதாசிவம் இணைந்து  பல லட்சங்களுக்கு விற்று உள்ளதாகவும்  மேலும்  கோவில் உறுப்பினர்களான 40 செட்டியார் குடும்பங்களை புறக்கணித்து தன்னிச்சையாக செயல்படுவதாகவும், இது சம்பந்தமாக இந்து அறநிலைத்துறைக்கு பலமுறை புகார் மனு கொடுத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். மேலும் தற்போதுள்ள கோவில் நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/