கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அனுமன்தீர்த்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த கார் விபத்தில், ஊட்டி அடுத்த கோத்தகிரி அருகே தாசமுனி கிராமத்தை சேர்ந்த ஊட்டி பிலிம் இன்ஸ்டியூட் புகைப்பட கலைஞர் ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வரதகிருஷ்ணன் அதிகாலை ஊத்தங்கரை பகுதியில் இருந்து வேலூரில் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் ஊட்டி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அனுமன்தீர்த்தம் பகுதியில் முன்னால் சென்ற லாரி பழுதாகி நின்றது. தூக்கக் கலக்கத்தில் இருந்த வரத கிருஷ்ணன் ஓட்டி வந்த கார் லாரியின் பின் பக்கத்தில் மோதியது. இதில், தலை நசுங்கி வரத கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது. காருக்குள் சிக்கிய வரத கிருஷ்ணனின் உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்.சத்தியநாராயணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக