பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம்,வார்பட்டு ஊராட்சியில், டெங்கு/ தொற்றா நோய்கள் சுகாதார விழிப்புணர்வு முகாம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 14 செப்டம்பர், 2023

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம்,வார்பட்டு ஊராட்சியில், டெங்கு/ தொற்றா நோய்கள் சுகாதார விழிப்புணர்வு முகாம்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரம் வார்பட்டு ஊராட்சி, தேவன்பட்டிகிராமத்தில் பொதுமக்களுக்கு மேலைச்சிவபுரிஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக 14.9.23 ஆகிய இன்று டெங்கு காய்ச்சல் குறித்த விரிவான விழிப்புணர்வும், ஏடிஸ் கொசுப் புழுவை காண்பித்து நேரடி விளக்கமளிக்கப்பட்டது, நிகழ்வில் சுமார்  50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.


அதனை தொடர்ந்து தொற்றா நோய்களான சர்க்கரை நோய் இரத்த அழுத்த நோய் மற்றும் கர்ப்பிணி பெண்கள் 12 வாரத்தில் கர்ப்பத்தை பதிவது பிறப்புச் சான்று பெறும் வழிகள்/தொற்றா நோய்களுக்காக மாத்திரை வாங்குவோர் இடைநிற்க்காமல் தொடர்ந்து பெறுதல் அவசியம் ஏடிஸ் கொசுக்கள் மூலம் ஏற்படும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்/தடுப்பு/ சிகிச்சை முறைகள் ஆகியவை பற்றியும் நல்ல தண்ணீரை மூடி வைத்தல்/ தொட்டியை சுத்தம் செய்தல்/ பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் நா .உத்தமன்_விரிவாக விளக்கமளித்தார், 
சு. ஆ பிரேம்குமார் பணித்தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/