பந்தாரப்பள்ளி ஊராட்சியில் மூன்று மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 செப்டம்பர், 2023

பந்தாரப்பள்ளி ஊராட்சியில் மூன்று மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தரபள்ளி ஊராட்சி நல்லகிந்தனபள்ளியில் சுமார் 80 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக ஜெயா சரவணன் உள்ளார், இந்த பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஜேசிபி எந்திரம் மூலம் குடிநீர் குழாய் மூன்று மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோன்டியுள்ளனர்.


ஆனால் இதுவரை அந்த பள்ளத்தை மூடாத காரணத்தால் அப்பகுதி சிறுவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் மூன்று மாத காலமாக குடிநீரும் சரிவர விநியோகம் செய்ய படவில்லை, இது குறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா சரவணனிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை இதன் காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் பச்சூர் வழியாக குப்பம் செல்லும் சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலிகுடங்கள் மற்றும் மரக்கட்டையில் தார் டிரம்முகள் ஆகியவற்றை சாலையில் வைத்து பள்ளி வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் ஆகியவற்ற சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எனவே சுமார் 2 மணி நேரத்திற்கும் சாலை மறியல் நீடித்தது இதன் காரணமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவில் போக்குவரத்துகள் அனிவகுத்து நின்றன மேலும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும் இதன் காரணமாக மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். இந்தச் சம்பவம் அறிந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இருப்பினும் சமாதானமாக பொதுமக்கள் தங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் குமார் சம்பவ இடத்திற்கு வந்து இன்று குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும் என்று கூறியதன் பேரில் கலைந்து சென்றனர். இதன் காரணமாக சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்திற்கு வருவதில்லை எனவும் அவருடைய கணவர் சரவணன் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார் என குற்றச்சாட்டப்பட்டவர் என்று குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/