பள்ளியில் மண் அள்ளும் மாணவ, மாணவிகள்; வேலை வாங்கிய தலைமை ஆசிரியர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 செப்டம்பர், 2023

பள்ளியில் மண் அள்ளும் மாணவ, மாணவிகள்; வேலை வாங்கிய தலைமை ஆசிரியர்.


நாட்றம்பள்ளி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் நேற்று காலை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மண் அள்ளி கொட்ட சொல்லி மாணவ மாணவிகளை வேலை வாங்கிய தலைமை ஆசிரியரால் பரபரப்பு. 


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி 14 வது வார்டு அதிபெரமனூர் பகுதியில் சுமார் 50 ஆண்டு காலமாக அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த பள்ளியில் பணி புரியும் பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி மற்றும் ஆசிரியர் அபிராமி ஆகியோர் நேற்று காலை சுமார் 2மணி நேரத்திற்கு மேலாக பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை மண்ணை அள்ளி கொட்ட சொல்லி வேலை வாங்கும் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .


மேலும் சென்ற ஆண்டு இந்த பள்ளியில் 92 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வந்த நிலையில் இந்த கல்வியாண்டில் 60 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு படிக்க வரும் மாணவ மாணவிகளிடம் இதுபோன்ற வேலைகளை ஆசிரியர்கள் வாங்குவதால் தற்போது பள்ளிக்கு வந்து கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் கூட பள்ளிக்கு வராமல் இன்று விடுவார்கள் போல இருக்கிறது.


மேலும் குழந்தைகள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு சலுகைகளையும் வழங்கி வரும் நிலையில் இதுபோன்று மாணவ மாணவிகளை பள்ளியில் ஆசிரியர்கள் வேலை வாங்கும் சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


- தாலுகா செய்தியாளர். கோபிநாத் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/