கருங்குளம் பகுதியில் பஸ் கார் மோதல் ஒருவர் பலி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

கருங்குளம் பகுதியில் பஸ் கார் மோதல் ஒருவர் பலி.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் திருநெல்வேலியிலிருந்து சென்ற காரும் திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வந்த அரசு பேருந்தும் மோதி விபத்து. காரை ஓட்டி வந்த ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குளத்தை சேர்ந்த ஆறுமுகத் தேவர் மகன் முருகன்(42) என்பவர் உயிரிழந்தார். 


காரில் வந்த மற்றொருவரான நெல்லையை சேர்ந்த சரவணன் என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மேலும் பஸ் டிரைவர் பிரபாகரன்(40), கண்டக்டர் கலாநிதி (33) ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. 

பஸ் பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்தில் இறந்த கார் டிரைவர் முருகனின் சொந்த ஊர் வெள்ளூர் கிராமம் ஆகும். இவர் கடந்த 2002ம் ஆண்டு தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அப்போதைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை கொலை செய்த வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட 3வது நபர் ஆவார்.


இன்று(29-09-2023) நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி வேல் கொலை வழக்கு விசாரணைக்காக ஆஜராகி விட்டு ஸ்ரீவைகுண்டத்திற்கு காரில் திரும்பிய போது விபத்தில் பலியானார். செயதுங்கநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad