அரசு இஞ்சினியரிங் காலேஜ் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

அரசு இஞ்சினியரிங் காலேஜ் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

அரசு இஞ்சினியரிங் காலேஜ் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்




கும்பகோணம் அரசு இஞ்சினியரிங் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்திய மூன்று நாள் அறிவியல் தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. துணை முதல்வர் முனைவர் கலைமணி சண்முகம் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமின் நோக்கம் மற்றும் பயன்களை எடுத்துரைத்தார்.



 கல்விப் புலத்தலைவர் முனைவர் ருக்மாங்கதன் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார். இந்த பயிற்சி முகாமில் தஞ்சாவூர் மாவட்ட தொழில் மைய மேலாளர் மணிவன்னன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து சுமார் 150 இறுதி ஆண்டு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பங்குபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பயிற்சி முகாமின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் தியாகராஜன், முகமது ஹாரிஸ் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/