நீலகிரி மாவட்டம் தக்கர்பாபா நகர் பகுதியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

நீலகிரி மாவட்டம் தக்கர்பாபா நகர் பகுதியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு


நீலகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. டாக்டர். பிரபாகரன் அவர்களின் உத்தரவு படியும் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு காவல் துறை துணை கண்காணிப்பாளர் திருமதி. விஜயலட்சுமி அவர்களின், வழிகாட்டுதல்படியும் இன்று 1/ 9/ 2023 உதகை ஊரக உட்கோட்டம் எமரால்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட தக்கர் பாபா நகர் கிராமத்தில் சுமார் 50 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில், சாதி மத இன வேறுபாடு இன்றி ஒன்றிணைவோம் மற்றும் வன்கொடுமை பற்றியும், அதன் பாதிப்புகளை பற்றியும் காவல் ஆய்வாளர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

இச்சமுதாயத்தில் அனைவரும் சமம் எனும், பிறப்பும் இறப்பும் நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆகவே ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதையும் இந்த விழிப்புணர்வில் தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வில் புள்ளியல் ஆய்வாளர் திரு.குணசீலன் எஸ்ஜே&எச்ஆர், அவர்களும், காவல்துறை உதவி ஆய்வாளர் திரு. ராமச்சந்திரன் மற்றும் காவல்துறை ஆய்வாளர் திரு. ஜான் அவர்களும் மற்றும் பெண் முதல் நிலை காவல் திருமதி. விஜயலட்சுமி ஆகியோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இக்கூட்டத்தில் ஊர் பெரியோர்கள் மற்றும் ஊர் இளைஞர் அணி கலந்து கொண்டு இக்கூட்டத்தில் தங்கள் கோரிக்கைகளையும் வைத்தனர் 


அதனைத் தொடர்ந்து தக்கர் பாபா நகர் கிராமத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் கல்வியிலும் விளையாட்டுத்துறைகளிலும் சிறந்து வருகின்றனர். இருந்தும் தக்கர் பாபா நகர் ஒட்டுமொத்த இளைஞர்களும் வேலை இன்றி தவிக்கின்றனர். இதனை விரைவில் சரி செய்து தருமாறு அந்த கிராம இளைஞர்கள் தங்கள் கோரிக்கினை தெரிவித்தனர். இதனை கிராமத்துக் வந்திருந்த காவல் ஆய்வாளர்கள் தங்களது ஊர் ஒற்றுமையை பார்த்து பாராட்டினார். அதில் காவல் துறை ஆய்வாளர் அந்த கிராம இளைஞர் அணிக்கும் ஊர் பொதுமக்களுக்கும் ஒத்துழைத்ததற்கு நன்றி தெரிவித்தனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக  மஞ்சூர் செய்தியாளர் எஸ். கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/