மண்டல அளவிலான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பயிலரங்கம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 செப்டம்பர், 2023

மண்டல அளவிலான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பயிலரங்கம்

மண்டல அளவிலான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பயிலரங்கம்



தஞ்சாவூர் மாவட்டம்  மண்டல அளவிலான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பணிமனையில்  வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் காட்டுத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது



நிகழ்ச்சியில்  துணை இயக்குனர் கோ வித்யா வரவேற்று பேசினார்.பேராசிரியரும் தலைவருமான  ராமநாதன்   தலைமை வகித்தார். மத்திய திட்டம் வேளாண்மை துணை இயக்குனர்  ஈஸ்வர்,வேளாண்மை துறை இயக்குனர் புலவர் பயிற்சி நிலையம் திருமதி பால சரஸ்வதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.



உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வணிக திட்டம் தயார் செய்தல் மற்றும் நிதி மேலாண்மை குறித்து TNSFAC, நிதி ஆலோசகர் ரவிச்சந்திரன் அவர்கள் எடுத்துரைத்தார்.தொடர்ந்து
உழவர் உற்பத்தி தேர்தல் நிறுவனத்தின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகள் பற்றி WEFSA நிர்வாக இயக்குனர்  மகேந்திரா,WEFSA நிர்வாக இயக்குனர் எம் மணிவாசன், ஆகியோர்  எடுத்துரைத்தார்.



உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வழங்கக்கூடிய கடன் வசதிகள் மற்றும் நிதி ஆதாரங்கள் பெறுவதற்கான வழிவகைகள் குறித்து NABKISAN தரணிதரன், மாவட்ட வளர்ச்சி அலுவலர் NABARD தீபக் குமார்  ஆகியோர் எடுத்துரைத்தனர்
மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயார் செய்தல் மற்றும் சந்தைப்படுத்துவது குறித்து இணை பேராசிரியர் NIFTEM திருமதி ஹேமா  எடுத்துரைத்தார்.
e-NAM திட்டம் குறித்து விற்பனைக்குழு மேலாளர் திருமதி சரண்யா எடுத்துரைத்து
Delta Foods மற்றும் KPMG உழவர் உற்பத்தியில் நிறுவனங்களுக்கு தங்களுடைய கருத்துக்களை பரிமாறினர்.வேளாண்மை அலுவலர் ஜெய் ஜிபால் ஜெப சிங் நன்றி கூறினார்.


தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய ஏழு மாவட்டங்களிலிருந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் 90 பிரதிநிதிகள் மற்றும் 15 அலுவலர்கள் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/