மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் , திமுகவில் இதுவரை மாவட்ட அளவில் மட்டுமே மாணவரணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது நகர, ஒன்றிய /பேரூர் பகுதிகளிலும் திமுகவின் மாணவரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.
திமுக மாணவரணி நேர்காணலில், மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் ஜெரால்டு, துணை செயலாளர் வீரமணி ஆகியோர் மாணவர் அணி பதவிக்கான நேர்காணலுக்கு வந்திருந்தவர்களை தகுதி குறித்தும் மற்றும் அவர்களுடைய அனுபவம் குறித்தும் நேர்காணலின் போது தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நேர்காணலில், கைக்குழந்தையுடன் மாணவியர்களும், இளைஞர்கள் பெரும்பான்மையானோர் ஆர்வத்துடனும் பங்கேற்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக