கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம், புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட துவக்க விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம், புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட துவக்க விழா.


தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட பள்ளி செல்லாத 4.80 லட்சம் பேருக்கு அடிப்படை கல்வி கற்றுத் தர புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் நேற்று துவங்கியது. 15 வயதிற்கு மேற்பட்ட பள்ளி செல்லாத ஆண்கள் 1.58 லட்சம் பேர், பெண்கள் 3.21லட்சம் பேர், திருநங்கைகள் 134 பேர் என 4.80 லட்சம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.


அவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் தினமும் 2 மணி நேரம் கற்றல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தன்னார்வலர்களுக்கு வட்டார கல்வி அலுவலகங்களில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வயது வந்தோரை பள்ளிக்கு வரவழைத்து மட்டும் பயிற்சி அளிக்காமல், பணிபுரியும் இடங்கள், குடியிருப்புபகுதியிலும் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள், சி.இ.ஓ.,க்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மாதந்தோறும் இயக்குனருக்கு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த ஏந்தல் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட துவக்க விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியாள் எஸ்தர் ராணி நடைபெற்றது தன்னார்வலராக அலுமேலு மையங்களை நடத்துகின்றார்கள் என அறிமுகப்படுத்தப்பட்டு கற்போர் புத்தகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில், ஆசிரியர்கள், வயது வந்தோர் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/