திருமங்கலம் தொகுதியில் எந்த வளர்ச்சி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை பாரமுகம் காட்டப்பட்டு வருகிறது - ஆர்.பி உதயகுமார் பேட்டி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

திருமங்கலம் தொகுதியில் எந்த வளர்ச்சி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை பாரமுகம் காட்டப்பட்டு வருகிறது - ஆர்.பி உதயகுமார் பேட்டி.

திருமங்கலம் தொகுதியில் எந்த வளர்ச்சி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை பாரமுகம் காட்டப்பட்டு வருகிறது, தொடர்ந்து புறக்கணித்தால் எடப்பாடியார் ஆணையை பெற்று மக்களைத் திரட்டி உண்ணாவிரதம் இருப்போம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் துணைதலைவர் ஆர்.பி உதயகுமார் பேட்டி.

திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து கூடுதல் ஆட்சியர் மோனிகாரணா தலைமையில் ஆய்வு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசியதாவது; திருமங்கலம் தொகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் சரிவர மக்களுக்கு வழங்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அனைவருக்கும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறையாக வழங்கி செயல்படுத்த வேண்டும்.

மேலும் தொகுதியில் 116 ஊராட்சிகள், ஒரு நகராட்சி, 2 பேரூராட்சிகள் உள்ளது. ஆனால் எந்த நிதியும் ஒதுக்கப்படாமல், பாராமுகம் காட்டப்பட்டு வருகிறது. அனைத்து தொகுதிகளுக்கும் சமநிலையில் நிதியை ஒதுக்க வேண்டும்.

அதேபோல் அம்மா பூங்கா செக்காணூரனியில திறக்கப்பட்டது தற்போது பராமரிப்பு இல்லை. அதேபோல் அம்மாபட்டியில் 25 லட்சம் மதிப்பில் அம்மா விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டது, தற்போது பராமரிப்பு இல்லாமல் அந்த மைதானமே காணாமல் போய்விட்டது.அதேபோல் செக்காணூரணி பகுதியில் மின் மயான வேண்டாம் என்றும், பாரம்பரிய முறையில் இருக்க வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள் அந்த மக்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும்.

ஊராட்சிகளுக்கு எந்த சிறப்பு நிதி ஒதுக்கப்படவில்லை ,குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என பேசினார்  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது; மதுரை மாவட்டத்தில் 10 தொகுதியில் உள்ளது ,இதில் 5 தொகுதிகள் அதிமுக வெற்றி பெற்றது. கடந்த அம்மா ஆட்சி காலத்தில் பாரபட்சமில்லாமல் திட்டங்களை எடப்பாடியார் வழங்கினார்கள்.

கடந்த அம்மா ஆட்சியில் திருமங்கலம் ரயில்வே மேம்பாலம் அமைக்க 110 விதியின் கீழ் அரசாணை வெளியிட்டு, அதனைத் தொடர்ந்து பூமி பூஜை எடுக்கப்பட்டு, நில எடுப்பு பணி தொடங்கப்பட்டது தற்போது அந்த திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

அதேபோல் புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த அம்மா ஆட்சி காலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, நில ஒப்படைப்பு பணி நடைபெற்று, டெண்டர் கோரப்பட்டது தற்போது பழைய பேருந்து நிலையத்தில் ஷாப்பிங்காம்ப்ளக்ஸ் போல் கட்ட திட்டமிடப்பட்டு அந்த திட்டமும்  கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

மேலும் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கப்பலூர் டோல்கேட் அகற்றுவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். தற்போது கூட ,மத்திய அரசு சில டோல்கேட் அகற்றப்படும் அறிவித்தது அதில் கப்பலூர் டோல்கேட்டையும்  அகற்ற தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கும் முறையாக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. ஒரு ஊராட்சியில் 5 கிராமம் இருந்தால், சில கிராமங்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ஒதுக்கீடு செய்து சில கிராமங்களுக்கு வழங்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அனைவருக்கும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை வழங்க வேண்டும்.

திருமங்கலம் தொகுதியில் எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லைபாராமுகம் தான் காட்டப்பட்டு வருகிறது. பலமுறை மாவட்ட நிர்வாகத்துடன் திருமங்கலம் தொகுதியின் அடிப்படை வசதி குறித்தும், கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற கோரியும், ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.கப்பலூர் டோல்கேட் குறித்து மக்களிடத்தில் கருத்து கேட்டோம் அதற்காக என் மீது உட்பட பல பேர் மீது வழக்கு போட்டார்கள்.

கடந்த எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை திருமங்கலம் தொகுதிகளுக்கு செய்து கொடுத்தோம் ,தற்போது எந்த திட்டங்களும்,நிதியும் வரவில்லை. ஸ்டாலின் செய்த ஒரே சாதனை என்றால் தனது தந்தை கருணாநிதிக்கு நூலகம் வைத்தது. தான். திருமங்கலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் பணி, புதிய பேருந்து நிலையம் திட்டம், அதேபோல் கப்பலூர் டோல்கேட் அகற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தாமல் இருப்பதை கண்டித்து எடப்பாடியார் அனுமதியது பெற்று திமுக அரசை கண்டித்து மாபெரும்  உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவோம் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மதுரையில் புதிய ஆட்சியர் கட்டிடம் தொடங்கி, ஆயிரம் கோடி அளவில் மதுரையில் பறக்கும் பாலம்,  மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே 5 செக்டேம்,குடிநீர் பற்றாக்குறையை போக்க 1,296 கோடியில் குடிநீர் திட்டத்தை   வழங்கினோம்.ஆய்வு கூட்டத்தில் வேண்டிய திட்டங்கள் குறித்து பேசி உள்ளேன்.மக்களுக்காகத்தான் சட்டங்கள் ஆனால் இன்றைக்கு திமுக ஆட்சியில் சட்டங்களுக்காக மக்கள் என்ற நிலையில் உள்ளது என கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் திருப்பதி, துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வம், ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், மாவ்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கராஜ பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், முசிசோமு முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/