புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வலையப்பட்டியில் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவ, மாணவியர் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் இலவச கல்வி மையம் தொடக்கவிழா நடைபெற்றது.
தமிழ்வழிக்கல்வி பயிலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு ஆசிரியர்களை கொண்டு, மாலை நேரத்தில் வகுப்புகள் நடத்தி, மாணவர்களை கல்வியில் மேன்மையுறச்செய்யும் நோக்கில் கொடையாளர் வலையபட்டி தொழிலதிபர் மருதப்பன் முத்தாத்தாள் தம்பதியினரால் இருக்கைகளுடன் கூடிய நான்கு வகுப்பைறைகளுடன் அமைக்கப்பட்ட மணி இலவச கல்வி மையம் தொடக்கவிழாவிற்கு மருதப்பன் தலைமைவகித்தார். பொறியாளர் வைரவன் வரவேற்றார்.
முத்தமிழ்ப்பாசறைத்தலைவர் ஆசிரியர், பாலமுரளி, ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் வில்லியம், மீனாட்சி, பொறியாளர் பழனியப்பன், ஜெயம்கொண்டான், அண்ணாமலை, வடுகநாதன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். விழாவில் கல்வி மையத்தில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள்கள், பாடக்குறிப்பேடுகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.
- எம். மூர்த்தி, தமிழக குரல், புதுக்கோட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக