திருப்பத்தூர் அடுத்த பம்பாகுட்டை கிராமத்தில் பகுதிநேர நியாயவிலை கடை திறப்பு- மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 செப்டம்பர், 2023

திருப்பத்தூர் அடுத்த பம்பாகுட்டை கிராமத்தில் பகுதிநேர நியாயவிலை கடை திறப்பு- மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு.


திருப்பத்தூர் மாவட்டம், பம்பாகுட்டை கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது. 

முன்னதாக மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேசன் அனைவரையும் வரவேற்றார். திண்ணாமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாள் சந்திரன் மற்றும் பாலாஜி இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்துக் கொண்டார். 


சி2539 பொம்பிகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் ஒரு பகுதியாக இந்த பகுதி நேர நியாய விலை கடை செயல்படும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஸ்கர பாண்டியன் பேசுகையில் தொடர்ந்தது நீண்ட கால பிரச்சினைகள் உள்ள பகுதிகளில் புதிய நியாயவிலை கடை  திறந்து வைக்கப்பட்டுள்ளது. 


பொதுமக்கள் ஐந்து கிலோமீட்டர் தொலைவு சென்று வாங்கிட்டு வந்தாங்க. இந்த திம்மணாமுத்தூர் கடையில்  இருந்து 830 கார்டுகளிலிருந்து 151 குடும்பங்கள் பிரித்து இந்த பகுதிநேர கடை பிரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். 


பசியோட வரும் குழந்தைகள் நலன் கருதியே காலை உணவு திட்டம். பெண் கல்வி ஏன் முக்கியம்னா பெண்கள் திருமணம் முடிக்கிறபொழுது அந்த குடும்ப மட்டுமல்ல அந்த சமுதாயம் நம் நாடும் வளம் பெறும் என்றார்.  பெண்களை படிக்க வையுங்கள், எந்த பிரச்சனை என்றாலும் சமாளிப்பார்கள்.  ஆனா 18 வயது குறைவாக இருக்கிற பெண்ணை நீங்கள் திருமணம் பண்ணீங்கன்னா அந்த பெண் வந்து கருவுற்று பிற்காலத்தில் இறப்பதற்கான சாத்திய கூறுகள் ஐந்து மடங்கு அதிகம். 


குழந்தை பிறக்கின்ற போது அந்த குழந்தை வந்து மாற்றத்திறனாளியாக பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் அப்ப தயவுசெய்து இதை செய்யாதீங்க. இந்த பகுதியில் உள்ள பெண்களை படிக்க வையுங்கள் என்றார். 


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/