அரும்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 செப்டம்பர், 2023

அரும்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி.

ராணிப்பேட்டை மாவட்டம்  ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  அரும்பாக்கம் ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்  இந்த நிலையில்   நேற்று இரவு பெய்த கனமழையால்  குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்து  தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.


இது குறித்து அங்குள்ள பொதுமக்கள் கருத்து தெரிவித்த போது    பாம்பு,  தேள், தவளை, நட்டுவாக்காலி,எறும்பு,  வண்டுகள் போன்ற விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்து கடித்து விடுகின்றன, கொசுக்கள் உற்பத்தி உற்பத்தி அதிகமாகிவிட்டது எந்த பூச்சி எப்பொழுது கடிக்குமோ என்று பயத்தோடு  இரவு முழுவதும் தூங்க சிரமப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.


மேலும் தெருக்கள் முழுவதும்   மழைநீர்  தேக்கத்தால்  வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கும் மிகவும் உள்ளதாகவும் ஆடு மாடுகள் கட்டி வைப்பதற்கும்   இடமில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாக கூறினார் மேலும் அவர்கள் கூறுகையில்  ஊராட்சி நிர்வாகத்தைச் சேர்ந்த  அதிகாரிகள்  நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதிகளிலிருந்து மழை நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை  விடுத்தனர். நடவடிக்கை எடுப்பார்களா? துறை சார்ந்த அதிகாரிகள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/