கும்பகோணம் அருகே திருப்புறம்பயம் உள்ள சாட்சிநாத சுவாமி திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பிரளயம் காத்த விநாயகருக்கு தேனபிஷேகம்,, - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

கும்பகோணம் அருகே திருப்புறம்பயம் உள்ள சாட்சிநாத சுவாமி திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பிரளயம் காத்த விநாயகருக்கு தேனபிஷேகம்,,

கும்பகோணம் அருகே திருப்புறம்பயம் உள்ள சாட்சிநாத சுவாமி திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பிரளயம் காத்த விநாயகருக்கு தேனபிஷேகம்,,,



கும்பகோணம் அருகே திருப்புறம்பயம், மதுரை ஆதினத்திற்கு சொந்தமான தேனபிஷேக பெருமாள் திருத்தலம்
ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில், சிவபெருமான் இத்தலத்தை பிரளயத்திலிருந்து பாதுகாக்கும்படி விநாயகருக்குக் கூறினார். விநாயகரும் பொங்கிவந்த ஏழு சாகரங்களையும், இந்தத் தலத்தில் உள்ள திருக்குளத்துக்கு கீழ்கரையில் இருக்கும் ஏழுகடல் கிணறு என்று இப்போது அழைக்கப்படும் கிணற்றில் அடக்கி, பிரளயத்தில் இருந்து இந்தத் தலத்தை அழியாமல் பாதுகாத்தார். அப்போது, வருண பகவான் நத்தைக்கூடு, கடல்நுரை, கிளிஞ்சல் ஆகிய கடல் பொருட்களால் ஒரு விநாயகர் திருமேனியை உருவாக்கி, அவரை பிரளயம் காத்த விநாயகர் என்று பெயரிட்டு வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம். இத்தகைய சிறப்பு வாய்ந்த சாட்சிநாத கோவிலில், விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி அன்று மட்டும் இரவு முழுவதும் தேன் அபிஷேகம் நடைபெறும். இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பிரளயம் காத்த விநாயகருக்கு, தேனபிஷேகம் நடைபெற்றது. இந்த தேனபிஷேகம் மதுரை ஸ்ரீ திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனம் 293 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன் பிரளயம் காத்த விநாயகருக்கு தேனபிஷகம் செய்யப்பட்டது. இரவு முழுவதும் நடைபெற்ற தேனபிஷேகத்தில் தேன் முழுவதும் விநாயகர் திருமேனியால் ஊற்றப்பட்டது. இந்த தேனை ஊற்ற ஊற்ற, விநாயகர் உறிஞ்சப்பட்டார். தேன் அபிஷேக முடிவில் இத்திருமேனி செம்பவள நிறத்தில் காட்சி அளிக்கும். வருடத்தில் மற்ற நாட்களில் இந்த விநாயகருக்கு அபிஷேகம் ஏதும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தொடர்ந்து சூரிய நாராயணன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து பரதநாட்டியமும், மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவது ஆன்மீகமே அறிவியலே பல்சுவை காவலர் முனைவர் பாஸ்கர், குழுவினரின் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/