அந்தியூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அம்மாபாளையத்தில் பவானி ஆற்றில் உயர் மட்ட சாலை பணிி அமைத்தல் பொதுமக்களின் கோரிக்கை எம் எல் ஏ ஆய்வு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

அந்தியூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அம்மாபாளையத்தில் பவானி ஆற்றில் உயர் மட்ட சாலை பணிி அமைத்தல் பொதுமக்களின் கோரிக்கை எம் எல் ஏ ஆய்வு

அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட அம்மாபாளையத்தில் பவானி ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டி பொதுமக்களின் கோரிக்கை மனு குறித்து  நேரில் ஆய்வு.


ஈரோடுமாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபாளையம், மேவானி, கணேசம்புதூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் இப்பகுதி விவசாயிகள் தங்களது அன்றாட பணிகளுக்கும், அவசர கால சிகிச்சைக்கும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் 7கி.மீ தொலைவு சுற்றி செல்ல வேண்டும்.


இதனால் பவானி ஆற்றை கடந்தால் அருகாமையில் உள்ள அத்தாணியில் பள்ளி, மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பவானி ஆற்றை பரிசலில் கடந்து சென்று வருகின்றனர், இதனையடுத்து ஊர்பொதுமக்கள் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக பவானி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டி கோரிக்கை விடுத்து வந்தனர்.


இதனைதொடர்ந்து தமிழக முதல்வர் ஆட்சி பொருப்பேற்ற பிறகு முதல்வருக்கும்  எனக்கும் அம்மாபாளையம், கணேசம்புதூர், மேவானி பொதுமக்கள் பவானி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டி கோரிக்கை மனு அளித்திருந்தனர், முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்றபிறகு அம்மாபாளையம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அவசர சிகிச்சைக்கு ஆற்றை கடந்து செல்ல உயர் மட்ட பாலம் அமைக்க துறை சார்ந்த அலுவலக ஆய்வு பணிகளை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


இதனையடுத்து இன்று அம்மாபாளையம் பவானி ஆற்றின் பரிசல் பயணம் மேற்கொள்ளும் பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வின்போது  மேற்கொள்ளும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி பரிசல் பயணம் மேற்கொண்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/