நெமிலியில் தமிழ்நாடு அரசு பதிவுத்துறை மற்றும் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 செப்டம்பர், 2023

நெமிலியில் தமிழ்நாடு அரசு பதிவுத்துறை மற்றும் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி  சார்பதிவாளர் அலுவலகத்தில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றினை நட்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 


மேலும் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு  அவர்களும், மாவட்ட பதிவாளர், சார் பதிவாளர், ஒன்றிய துணைப்பெருந்தலைவர் ச.தீனதயாளன், நெமிலி பேரூராட்சி மன்றத் தலைவர். ரேணுகாதேவி சரவணன், பேரூராட்சி துணைத் தலைவர். சந்திரசேகர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நெமிலி பேரூராட்சியில் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் ரூ.3.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உட்கட்டமைப்பு வசதிகளையும், ரூ.5,00,000/- மதிப்பீட்டில், மேற்கொள்ளப்பட்டு வரும் CCTV கேமரா பொருத்தும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்நிகழ்ச்சியில், அசநெல்லிக்குப்பம் ஒன்றியக் குழு உறுப்பினர். சங்கீதா கதிரவன், நெமிலி பேரூர் கழக செயலாளர். ஜனார்த்தனன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். வி. எஸ். முரளி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், சார்பதிவாளர் அலுவலக அலுவலர்கள், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/