திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 22-ம் தேதி நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்ட இந்து முன்னனி கோட்ட தலைவர் மகேஷ் பேசும் போது திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து இழிவாக பேசியதாக ஆரணி திமுக நகர செயலாளர் ஏசி. மணி புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் ஆரணி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான காவலர்கள் இன்று அதிகாலை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள இந்து முன்னனி கோட்ட தலைவர் மகேஷ் என்பவரை அவரது வீட்டில் வைத்து கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். தற்போது சந்தவாசல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக