திருவண்ணாமலை நகராட்சி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தையும் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியம், நாரியமங்களம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3 வகுப்பறை கட்டிடம் பழுது பார்த்தல் பணி நடைபெற்று வருவதையும், கீழ்பெண்ணாத்தூரில் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும் அரசு முதன்மை செயலாளர்/வணிக வரித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.தீரஜ்குமார்,இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் மந்தாகினி மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக