தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் தான் நவதிருப்பதி தலங்கள் உள்ளன. இங்கே ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் நவ திருப்பதி தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம், ஆகவே இந்த கோயில்களுக்கு செல்வதற்கு போதுமான பேருந்து வசதி இல்லாததால், தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, பெருங்குளம், இரட்டை திருப்பதி, தென்திருப்பேரை, திருக்கோளூர் வழியாக ஆழ்வார் திருநகரி வரை உள்ள நவத்திருப்பதி தலங்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதி புரட்டாசி மாதங்களில் நான்கு சனிக்கிழமைகளில் 23.09.2023, 30.9.2023, 07.09.2023 மற்றும் 14.09.2023 ஆகிய நாட்களில் நவதிருப்பதி திருக்கோவில்களுக்கு பக்தர்கள் எவ்வித சிரமமுன்றி சென்று வர காலை 7.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து பேருந்து புறப்பட்டு அன்று இரவுக்குள் மீண்டும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்து சேருமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திலி) வ.து., திருநெல்வேலி மண்டலம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில்,14.09.23 முதல் அனைத்து நாட்களிலும் காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் தொடர்புக்கு : 94875 99456, 9976768029 இதற்கான பயணக்கட்டணத் தொகை, நபர் ஒன்றுக்கு ரூ.500/- ஆகும்.
எனவே, பக்தர்களும்,பொதுமக்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பத்திரிக்கை மற்றும் வானொலிக்கு V.சரவணன், பொது மேலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திலி) வ.து., திருநெல்வேலி. விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக