திருவிடைமருதூர் அருகே திருலோகியில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 செப்டம்பர், 2023

திருவிடைமருதூர் அருகே திருலோகியில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்.

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருலோகி ஊராட்சியில் அதிமுக சார்பில் அண்ணா 115 வது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை முன்னாள் எம்பி பாரதிமோகன் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. திருப்பனந்தாள் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏக்கள் தவமணி, ராம. ராமநாதன், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், கும்பகோணம் ஒன்றிய செயலாளர் அறிவழகன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார். 


அதிமுக தலைமை கழக பேச்சாளர் தஞ்சை மதியழகன் பொதுக்கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். திருப்பனந்தாள் பேரூர் கழக செயலாளர் மூர்த்தி நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சியில் திருப்பனந்தாள் திருவிடைமருதூர் கும்பகோணம் உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/