நீலகிரி மாவட்டத்தில் இயற்கை தாயின் கோரத்தாண்டவத்திற்கு விவசாயிகளின் விலை நிலங்கள் பலி... - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

நீலகிரி மாவட்டத்தில் இயற்கை தாயின் கோரத்தாண்டவத்திற்கு விவசாயிகளின் விலை நிலங்கள் பலி...



நீலகிரி மாவட்டம் முத்தோரை பாலடா அருகே பெய்த கன மழையால்  பல லட்சம் மதிப்புள்ள விவசாய பொருட்கள் மற்றும் விலை நிலங்கள் மழையினால் சேதமடைந்தது பல விவசாய பெருமக்கள் பல இன்னலுக்கு இடையே தங்கள் நிலங்களில் விளைவித்த விவசாய பொருட்கள் மழையினால் சேதம் அடைந்ததை பார்த்து விவசாயிகள் மன உளைச்சலுக்கு  ஆளாகினர். பெய்த கனமழையால் மழைநீர் வெல்லம் போல் புரண்டு ஓடியது.    மற்றும்  விவசாயிகளின் பூமிகளும் சேதம் அடைந்தது


கடந்தாண்டு பெய்த மழையின் போதும் இந்த முத்தோரைப்பாலடா பகுதியில் உள்ள விவசாயிகளின் விளைநிலங்கள் சேதமடைந்தது பற்றி விவசாயிகள் கூறும் பொழுது இது வருட வருடம் ஒரு தொடர்கதையாக மாறி உள்ளது நாங்கள் ஒவ்வொரு முறையும் பல இன்னல்களுக்கு இடையே கடன்பட்டு பல லட்சம் முதலீடு செய்து விவசாய பொருட்களை எடுத்துச் செல்கின்றோம் ஒரு சமயம் அங்கு விலை கிடைக்காமல் எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது இல்லை எனில் இயற்கை தாயின் கோரத்தாண்டவத்திற்கு ஆளாகி எங்கள் விலை பொருட்கள் இழப்பு ஏற்படுகிறது இது எங்களுக்கு விதிக்கப்பட்ட விதி என மனவேதனையுடன் குமரினர்...



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குந்தா தாலுக்கா செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/