பொன்னமராவதியில் வட்டார அளவிலான உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 14 செப்டம்பர், 2023

பொன்னமராவதியில் வட்டார அளவிலான உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வட்டார அளவிலான உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.வட்டார வள மையத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர்கள் இராமதிலகம், கல்வி அலுவலர் நிலை இரண்டு இலாஹிஜான் ஆகியோர் தலைமை வகித்தார்.


வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். பின்னர் தொடங்கிய கல்வி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் நலன் சார்ந்தும் புதிதாக மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிதல், அக்குழந்தைக்கு பள்ளியில் சேர்த்தல், அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை உடனே பெற்றுக் கொடுத்தல், நிலுவையில் உள்ள பெண்கள் உதவித்தொகை பெயர் பட்டியல் தயாரித்தல், மருத்துவ முகாம் திட்டமிடல் பணிகள் செய்தல், யூடிஐடி அடையாள அட்டை அனைவருக்கும் பெற்றுத் தருதல் உள்ளிட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் சார்ந்த விவரங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. 


இக்கூட்டத்தை IE ஒருங்கிணைப்பாளர் கல்யாணி ஒருங்கிணைத்தார்.மாவட்ட ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன மூத்த விரிவுரையாளர் மாரியப்பன் பார்வையிட்டார். இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் இயன்முறை மருத்துவர், பகல் நேர பாதுகாவலர், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


- எம். மூர்த்தி, தமிழக குரல்,மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/