அரக்கோணம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் அமைச்சர் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் அமைச்சர் பங்கேற்பு!

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி திமுக கழக வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான (BLA-2) கலந்தாய்வு கூட்டம் அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில் நடைபெற்றது.  


கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான. ஆர். காந்தி கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டுமென்றார். இதில் நகர செயலாளர். வி. எல். ஜோதி, அரக்கோணம் ஒன்றிய செயலாளர்கள் சவுந்தர், தமிழ்ச்செல்வன், பசுபதி, நெமிலி ஒன்றிய செயலாளர்கள். பெ. வடிவேலு, எஸ்.ஜி.சி. பெருமாள், ஆர்.பி. ரவீந்திரன், பேரூர் செயலாளர்கள். நாகராஜன், ஜனார்த்தனன், பொதுக்குழு உறுப்பினர். கண்ணயன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/