தட்டுத்தடுமாறி கீழே விழுகிறோம் காப்பாற்றுங்கள்! பள்ளி மாணவி திருப்பூர் மேயருக்கு மூலம் குரல் மூலம் கோரிக்கை! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

தட்டுத்தடுமாறி கீழே விழுகிறோம் காப்பாற்றுங்கள்! பள்ளி மாணவி திருப்பூர் மேயருக்கு மூலம் குரல் மூலம் கோரிக்கை!

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் வசிக்கும் ஒன்பதாவது படிக்கும் மாணவி திருப்பூர் மாநகராட்சி மேயர் நான் தினேஷ் குமார் அவர்களுக்கு குரல் பதிவு மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் மாநகராட்சி 32 வது வார்டில் உள்ள கோல்டன் நகர் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக பெரிய ஜல்லி களை கொண்டு வந்து ரோடு போடுவதற்கு போட்டுள்ளதாகவும் அதன் மீது வாகனத்தில் தந்தையுடன் பள்ளிக்கு செல்லும் பொழுது கீழே விழுந்து விட்டதாகவும் வயதான அம்மா ஒருவர் கற்கள் தடுக்கி தடுமாறி கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. 

எனவும் சாக்கடை, குடிநீர் பணிகள் செய்வதற்கு முன்பாகவே இந்த கற்களை கொண்டு வந்து நிரப்பி உள்ளார்கள் எனவும் மேயர் இருசக்கர வாகனத்தில் இந்த பகுதியில் பயணித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று குரல் பதிவு மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே ஒரு சில வார்டுகளில் திடீரென இருசக்கர வாகனத்தில் மேயர் ந. தினேஷ் குமார் பயணித்து குறைகளை களைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அதுபோல் 23 வது வார்டு சஞ்சய் நகரில் இருந்து கோல்டன் நகர் பகுதி வரை இருசக்கர வாகனத்தில் பயணித்து ஆய்வு செய்வாரா என்பது பள்ளி மாணவியின் கோரிக்கை மட்டுமல்ல அந்தப் பகுதி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். 


- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/