கேரளாவில் இருந்து குமரிக்கு கழிவுகள் கொண்டு வருவதை தடுக்க வேண்டும். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

கேரளாவில் இருந்து குமரிக்கு கழிவுகள் கொண்டு வருவதை தடுக்க வேண்டும்.

நாகர்கோவில் : கன்னியாகுமரி நாடாளு மன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த சில நாட்களாக கேரளாவில் இருந்து இறைச்சி, மீன், மருத்துவ கழிவு உள்பட பல கழிவு பொருட்களை லாரியில் கொண்டு வந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி விட்டு செல்கிறார்கள். இதை தடுக்க பல்வேறு சட்டங்கள் இருந்த போதும் கழிவுகளை தொடர்ந்து கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் சுற்று வட்டார பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனைகளை பலப்படுத்தி, கழிவுகள் எதுவும் குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு இட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/