காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கோரிக்கை வைக்கும் விவசாயிகள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கோரிக்கை வைக்கும் விவசாயிகள்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். வீராணம் ஏரியில் தற்போதைய நீர்மட்டம் 45.25 அடியாக உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள திருச்சின்னபுரம் பாசன மதகு வழியாக பாசனம் பெறும் சோழக்கூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகள் மூவாயிரம் ஏக்கருக்கும் மேல் தற்போது நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். 

இவர்களுக்கு கடந்த 10தினங்களுக்கு மேலாக போதிய தண்ணீர் இல்லாததால் கவலை அடைந்துள்ளனர். இப்போதுமகசூல் தாமதமானால்அடுத்து சம்பாபயிரும் தாமதமாகும் பின்னர் உளுந்து பயிர் விதைப்பும் தள்ளிப் போகும் சூழ்நிலை  உருவாகும் என்று விவசாயிகள் நினைக்கிறார்கள். இதனால் நேரடி நெல் விதைப்பு செய்த சோழக்கூர் பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஏக்கர்களும் மற்றும் இதனைச் சுற்றியுள்ள சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நேரடி நெல் விதைப்பு வயல்கள் என மூன்றாயிரம் ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்களின் விவசாயிகள் தண்ணீரை எதிர்பார்த்து காத்திருந்த வேலையில் விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து தங்கள் நிலையை விளக்கிய காரணத்தினால் தற்போது குறைந்த அளவிலே தண்ணீரை திருச்சின்னபுரம் மதகு வழியாக திறந்திருக்கும் நிலையில் தங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/