காட்பாடி பாலாற்றில் மாட்டு வண்டியில் மணல் திருட்டு தட்டி கேட்ட விவசாயி மீது தாக்குதல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

காட்பாடி பாலாற்றில் மாட்டு வண்டியில் மணல் திருட்டு தட்டி கேட்ட விவசாயி மீது தாக்குதல்.

வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த தொப்பூலான் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி லோகநாதன். இவர் அதே பகுதி பாலாற்றங்கரையோரம் விவசாய நிலம் வைத்துள்ளார். இந்த நிலையில், நேற்று அதிகாலையில் குப்பத்தா மோட்டூர் பகுதியை சேர்ந்த விநாயகம் என்பவர் லோகநாதன் நிலத்திற்கு அருகே பாலாற்றில் மணல் திருடி மாட்டுவட்டியில் ஏற்றி கொண்டு இருந்துள்ளார்.


இதனை பார்த்த விவசாயி லோகநாதன் மாட்டு வண்டியில் மணல் கடத்துவதை தடுத்து இந்த இடத்தில் மணல் அள்ளாதே என்று கூறியுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பின்பு கைக் கலப்பாக மாற்றிய நிலையில், மணல் அள்ளுவதற்கு பயண்படுத்திய மண்வெட்டியை எடுத்து விவசாயி லோகநாதனை தாக்கியுள்ளார் மாட்டுவண்டி விநாயகம். மண்வெட்டியால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த விவசாயி லோகனாதனை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்த திருவலம் போலீஸார் மணல் கடத்தலில் ஈடுபட்ட விநாயகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.


- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு.இன்பராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/