திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை காலில் உன்னிகள் கூடு? கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 செப்டம்பர், 2023

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை காலில் உன்னிகள் கூடு? கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை!

தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை காலில் உன்னிகள் கூடுகட்டியதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவியதையடுத்து கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அது வீண் வதந்தி என்பது தவறான தகவலை பரப்பியது தெரியவந்தது. 


உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு சிறப்புகள் பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான இக்கோயிலில் 25வயது ஆன தெய்வானை என்ற பெண் யானை உள்ளது. கடந்த 2006ம்ஆண்டு முதல் கோயிலில் உள்ளது. தெய்வானை யானைக்கு உண்ண உணவு பக்தர்கள் யாரும் நேரடியாக வழங்க முடியாது. துலாபாரத்தில் ஒப்படைக்கப்படும் உணவுகள் பல்வேறு ஆய்வுகளுக்குபின் உப்பு, மஞ்சள் தண்ணீரில் ஊற வைக்கப்பட்டு பின்னர் தான் யானைக்கு வழங்கப்பட்டு வருகிறது.


மேலும் வழக்கமாக தென்னை ஓலை, நாணல்புல், கோதிரி என்றபுல் மற்றும் மடப்பள்ளியிலிருந்து அரிசி, பயிறு, ராகி, சீரகம், மிளகு கலந்து சாப்பாடு காலை, மாலை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தினமும் காலை சரவணபொய்கையில் உள்ள நீச்சல் குளத்தில் நீராடுவது வழக்கம்.  கோயிலின் ராஜகோபுரம் பகுதியில் யானை தங்குவதற்கு குடில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு யானைக்கு வழக்கமாக பக்தர்கள் உணவுகள் வழங்குவது, செல்போனில் படம் பிடிப்பது வழக்கம். ஆனால் தற்போது பக்தர்கள் யானை பார்வையிட முடியுமே தவிர அதற்கு உணவுகள் ஏதும் வழங்க முடியாத வகையில் சிறிய அளவிலான வலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் காலை, மாலையில் கோயிலைச் சுற்றி வலம் வரும் போது யாரோ ஒரு நபர் தெய்வானை யானை காலில் உன்னிகள் கூடுகட்டி இருப்பதாகவும் அதனை கோயில் நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்ற செய்தி சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது, இதனையடுத்து திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் யானைக்கு முழுபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 


இதுகுறித்து திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகனிடம் கேட்டபோது, யானை உட்கார்ந்து எழும்பும் போது மாதந்தோறும் முறையாக மருத்துவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது, கோயிலில் தற்போது பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயிலின் வளர்ச்சியை தாங்க முடியாத சிலர் இந்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மனிதர்களுக்கு ஓரே இடத்தில் உராய்வு ஏற்படும் போது காய்ப்பு பிடிப்பது வழக்கம் அதே போல் தான் யானைக்கு படுத்து எழும்பும் போது முட்டி போடும் அதில் உள்ள காய்ப்பு தான் தவிர வேறு ஏதும் கிடையாது என கூறினார்.  


மேலும் யானைக்கு சிகிச்சையளித்து வரும் கால்நடை மருத்துவர்கள் கூறும்போது..யானையின் காலில் உன்னி ஏதும் கிடையாது. யானை படுக்கும் போது முட்டி போடுவது வழக்கம் அப்போது உள்ள தழும்பு. இது யானைக்கு உள்ள எந்த நோயும் கிடையாது. யானை நல்ல பராமரிப்பில் நல்ல நலமாக இருக்கிறது எனக் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/