ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்திலுள்ள லாலாபேட்டையில் நடைபெற்று வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் ஹோமினியம் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் சார்பில் 4 புதிய ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை தொடங்கப்பட்டது.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றுடம் திட்டத்தின் துணைத் தலைவர் பிரேம் ஆனந்த் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் கோகுல் துணைத்தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் பிளாஸ்டிக் ஹோமினியம் கம்பெனியின் பொது மேலாளர் பாலமுருகன் புதிய ஸ்மாட் கிளாஸ் வகுப்பினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
துணைத் தலைவர் லோகேஷ் குமார் கணபதி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரந்தாமன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சேட்டு மாணிக்கம் பழனி ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மேலாளர் சதிஷ்குமார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முதலில் பள்ளி தலைமை ஆசிரியை சிவஜோதி வரவேற்றார் நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் சர்புதின் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக