திமுக பிரமுகர்களுடன் இணைந்து இருகூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் கிராம நிர்வாகி அதிகாரி இணைந்து கூலித் தொழிலாளியின் வீட்டை அபகரிக்க முயற்சி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

திமுக பிரமுகர்களுடன் இணைந்து இருகூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் கிராம நிர்வாகி அதிகாரி இணைந்து கூலித் தொழிலாளியின் வீட்டை அபகரிக்க முயற்சி.


கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சி, ஏ.ஜி.புதூர் பகுதியில் வசித்து வரும் அறிவரசு தனது மனைவி சுமதி மற்றும் தங்களது குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி முகாமில் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம், 70 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் வசித்து வந்த வீட்டை, பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி மற்றும் கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் ஆளுங்கட்சி செல்வாக்குடன் தங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் ராஜன் மற்றும் அவரது மகன் இளங்கோவன் ஆகியோருடன் இணைந்து எந்த விதமான ஒரு முன்னறிவிப்பும் இன்றி சட்டத்துக்கு புறம்பாக அத்துமீறி தங்களது வீட்டிற்குள் நுழைந்து, குழந்தை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று இருந்த போது அவர்கள் வீட்டில் இல்லாத போது, ஜேசிபி இயந்திரத்தை வைத்து வீட்டின் முன் பகுதியை எடுத்து சேதாரம் செய்து விட்டதாகவும், மேற்படி சம்பவம் குறித்து 17/7/23 அவசர உதவி நூறுக்கும் 18/7/23 அன்று E-1 காவல் நிலையத்திலும் புகார் அளித்தும், அதைத்தொடர்ந்து 19/7/23 மற்றும் 7/08/23 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

காவல் நிலையத்தில் தங்களை தரக்குறைவாக ஒருமையில் பேசி அவமானப்படுத்துவதாகவும், மேற்படி  பேரூராட்சியின் செயல் அலுவலர் கலையரசி கிராம நிர்வாக அதிகாரி, ராஜன், இளங்கோவன்  மீது நடவடிக்கை எடுத்து தங்களது வீட்டையும், இடித்த ஒரு பகுதியையும் மீட்டுத் தரும்படியும் தங்களது குடும்பத்திற்கு தக்க பாதுகாப்பு வழங்கும்படியும், தங்களது இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க மனுவை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/