கள்ளக்குறிச்சி வணிக வைசியர் திருமண மண்டபத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒன்றாவது மாநாடு இன்று நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

கள்ளக்குறிச்சி வணிக வைசியர் திருமண மண்டபத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒன்றாவது மாநாடு இன்று நடைபெற்றது.


இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நடத்தும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒன்றாவது மாநாடு இன்று கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள வணிக வைசியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி ரீத்தா தலைமை வகித்தார். மலர்க்கொடி, மாதுர்தேவி, சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் வளர்மதி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் மஞ்சுளா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
 

இந்த மாநாட்டின் வாயிலாக மாவட்ட தலைநகரங்களில் அரசு அறிவியல் கல்லூரி அமைத்திட வேண்டும், நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு பெற வழிவகை செய்ய வேண்டும், நகராட்சி பேரூராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தை கொண்டுவர சட்டம் இயற்ற வேண்டும், பாலியல் மற்றும் வன்கொடுமைகள் ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும், உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளிட்ட பெண் பிரதிநிதிகள் சுயமாக செயல்பட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பெண்கள் செயல்பாட்டிற்கு தடையாக இருப்பவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்றது. 


மேலும் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் நிர்வாகிகள் ஜெயசீலி, கலா, மரருத்தீஸ்வரி, செல்வி, வாசுகி, சின்னப்பிள்ளை, குமுதவல்லி, ராதா, அம்மா கண்ணு உள்ளிட்டோருடன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/