காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் மகளிர் மன்றம் சார்பாக சமூகப் விழிப்புணர்வுக் கருத்தரங்கம், - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் மகளிர் மன்றம் சார்பாக சமூகப் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்,


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் மகளிர் மன்றம் சார்பாக சமூகப் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் இன்று கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பெத்தாலெட்சுமி  தலைமை வகித்து மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வின் அவசியம் குறித்து கூறினார்.  

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் மாணவ மாணவர்களிடையே சமூக ஊடகங்களை கையாளும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சமூக ஊடகத் தளங்களின் மூலம் பல்வேறு இணையவழி குற்றங்கள் நடைபெறுகிறது என்றும்,படிக்கின்ற வயதில் மாணவ மாணவிகள் தங்கள் கவனத்தை கல்வியில் செலுத்த வேண்டும் என்றும் அதற்கு நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து படித்தால் தாங்கள் வாழ்வில் நிர்ணயித்துக் கொண்ட இலக்குகளை அடைய முடியுமென்றும் முயற்சியில்  தோல்வி ஏற்பட்டாலும் மனச்சோர்வடையாமல் அதை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றும் விளக்கிக் கூறினார். 


இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். கல்லூரியின் மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோமளவள்ளி நன்றியுரையாற்றினார். மாவட்ட செய்தியாளர் முத்துராஜன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/