பெரியகுளத்தில் முதுகு தண்டு காயம் அடைந்தோர் தினத்தினை முன்னிட்டு விபத்தில்லா தேசத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

பெரியகுளத்தில் முதுகு தண்டு காயம் அடைந்தோர் தினத்தினை முன்னிட்டு விபத்தில்லா தேசத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கூட்டம்.

தேனி மாவட்டம்  பெரியகுளத்தில் செப்டம்பர் 5 முதுகுத்தண்டு காயமடைந்தோர் தினத்தினை முன்னிட்டு "விபத்தில்லா தேசத்தை" வலியுறுத்தி முதுகு தண்டு பாதிக்கப்பட்டோர் ஒன்றிணைந்து பெரியகுளம்-கம்பம் மெயின்ரோடு  தேவர் சிலையிலிருந்து விழிப்புணர்வு ஊர்வலமாக சென்றனர். 

தேவர் சிலையில் தொடங்கிய ஊர்வலம் பெரியகுளம் புதிய பேருந்து நிலைய சந்திப்பில் முடிவுற்றது. அதனைத் தொடர்ந்து பெரியகுளம் கைலாசபட்டியில் இயங்கிவரும் ராம்ஜி ஸ்பைனல் ரீகேப் (ராம்ஜி டிரஸ்ட்) மூலம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தென் மண்டல செயலாளர் முத்துராமலிங்கம், தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர், டாக்டர் ராஜன், பெரியகுளம் நகர் நலச்சங்கம், செயலாளர் மற்றும் தென்கரை நூலக வாசகர் வட்ட தலைவர் அன்புக்கரசன், நேசம் தொண்டு நிறுவனர் முருகன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

பெரியகுளம் கைலாசபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ராம்ஜி ஸ்பைனல் ரீகேப் (ராம்ஜி டிரஸ்ட்) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் பொது மக்களுக்கு முதுகுதண்டுவட காயம், மற்றும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது .மேலும் முதுகுதண்டுவடத்தால் காயமடைந்து கை, கால்கள் செயல் இழந்தவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மயோபதி நோயினால் காயமடைந்தோர், மற்றும் உடல் இயக்க குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராம்ஜி பைனல் ரீகேப் , ராம்ஜி அறக்கட்டளையின் கீழ் மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும தெரிவித்தனர். 

முதுகு தண்டு பாதிப்பிற்கு இன்று வரை முழுமையான மருத்துவம் உலக அளவில் இல்லாததால் ஆரம்பகட்ட சிகிச்சைக்கு பின் முடங்கிவிடாமல் மறுவாழ்வு பயிற்சி பெற்று "உள்ளத்தில் உள்ளபடியே மகிழ்ச்சியாக வாழவும்" திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.மேலும் முதுகு தண்டுவடம் பாதித்தவர்களுக்கு உதவிட ராம்ஜி ஸ்பைனல் ரீகேப் என்றும் உதவிபுரியும் என்று கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/