தேங்கிய மழை நீரில் ஆயில் பால் போடுவதால் எண்ணெய் படலம் நீரில் படர்ந்து காணப்படும். அப்போது கொசுப்புழுக் கள் சுவாசிக்க மேலே வரும் போது சுவாசிக்க முடியாமல் இறந்து விடும். இதனால் டெங்கு காய்ச்சல் பரவாமல்தடுக்க முடியும் (ஆயில் பால் தயாரிக்கும் முறை கோணிபையில் மரத்தூள் உருண்டை யாக கட்டி வேஸ்ட் ஆயிலில் 24 மணி நேரம் ஊர வைத்து தேங்கிய மழை நீரில் போட வேண் டும் இதனால் கொசுப் புழுக்கள் இறந்து விடும். பொதுமக்களும் உங்கள் வீட்டு அருகே மழைநீர் தேங்கி இருந்தால் இதே போல் நீங்களும் செய்யலாம்.
குடி தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களில் கொசு புகாத வண்ணம் மூடி வைத்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் என்று சுகாதார அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக