இராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலயஆண்டு விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

இராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலயஆண்டு விழா.

இராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலய  ஆண்டு பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்  சிறுவர் சிறுமியர்களுக்கு புது நன்மை வழங்கப்பட்டு தொடர்ந்து சிறப்பு பாடல் திருப்பலி பூஜை நடத்தப்பட்டது

இராணிப்பேட்டை, செப். 8 : இன்று 8 ம் தேதி ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடந்த ஆண்டு பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் சிறுவர் சிறுமியர்களுக்கு புது நன்மை வழங்குதலுடன் சிறப்பு பெறுவிழா பாடல் திருப்பலி பூஜை நடத்தப்பட்டது.  விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்டு புனித ஆரோக்கிய அன்னையை வழிபட்டு சென்றனர்.

ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலய  ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 29 ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி இன்று செப்டம்பர் 8 ஆம் தேதி ஆண்டு பெருவிழா திருப்பலி பூஜை மற்றும் தேர் பவனியுடன் நிறைவுபெற்றது. தொடக்க நாளான கடந்த மாதம் 29ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் ராணிப்பேட்டை சிறுமலர் மடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாளகத்திலிருந்து புனித நீரால் அர்ச்சிக்கப்பட்ட புனித அரோக்கிய அன்னையின் திருக்கொடிைய முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. 

இதனை அடுத்து புனித ஆரோக்கிய அன்னை ஆலய வளாகத்திலுள்ள கொடிக்கம்பத்தில் புனித ஆரோக்கிய அன்னையின் திரு உருவக் கொடியை அதிர் வேட்டு முழங்க ஆலய மணியோசை முழக்கங்களுடன் பங்குத்தந்தை லியோ மரிய ஜோசப் தலைமையில் அருட்தந்தையர்கள் ஜேக்கப், சார்லஸ், ஐசக், ஜான் பால் ஆகியோர் முன்னிலையில் மழை மலை மாதா பேராலாய அருட்தந்தை லியோ எட்வின் ஏற்றி வைத்து சிறப்பு பாடல் திருப்பலி பூஜையை நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 30 ம் தேதி முதல் இன்று செப்டம்பர் 8 ம் தேதிவரை தினமும் மாலையில் ஜெபமாலைகள், திருப்பலி பூஜைகள், மறையுறைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பல்வேறு அருட்தந்தையர்களால் நடத்தப்பட்டது. நேற்று மாலை திவ்ய நற்கருைண சிறப்பு பவனி, திருப்பலி பூஜை, திவ்ய நற்கருைண ஆசீர்வாதம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து இன்று 8 ஆம் தேதி புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 8.30 மணியளவில் பெருவிழா திருப்பலி பூஜையை சிறப்பு  விருந்தினராக மும்பை நற்கருணை சபை அருட்தந்தை எம்.ஐ.ராஜ் கலந்து கொண்டு பங்குத்தந்தை லியோ மரிய ஜோசப் மற்றும் அருட்தந்தையர்கள்  முன்னிலையில் சிறப்பு கூட்டு பாடற் திருப்பலிப் பூஜை நடைபெற்றது. 

விழாவில் 25 சிறுவர் சிறுமியர்ளுக்கு சிறப்புபாடல் திருப்பலி பூஜை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்டனர். மாலையில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா திருப்பலி பூஜை மற்றும் சிறப்பு தேர்பவனியை பங்குத்தந்தை லியோ மரியோ ஜோசப் மற்றும் அருட்தந்தையர்கள் தொடங்கி வைத்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கினண்டனர். 

புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை லியோ மரிய ஜோசப் புனித லொயோலா அருட்தந்தையர்கள், புனித சார்லஸ் சபை அருட்கன்னியர்கள், வேதியர் டேவிட், அன்பிய பொருப்பாளர்கள், விழாக்குழுவினர், பாடற்குழுவினர்கள் மற்றும் இறைமக்கள் என பலர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/