கும்பகோணத்தில் இஸ்கான் அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருவிழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

கும்பகோணத்தில் இஸ்கான் அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருவிழா

கும்பகோணம் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி இஸ்கான் அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருவிழா வியாழக்கிழமை ராயாமஹாலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

ஸ்ரீஸ்ரீ கிருஷ்ண பலராமரின் விசேஷ தரிசனம், ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபம், ஹரி நாம சங்கீா்த்தனம், வண்ண மலா்களால் அலங்காரம், தீப ஆரத்தி, மகா அபிஷேகம், நைவேத்யங்கள், ஜெயந்தி உற்சவ சிறப்பு அலங்காரம் தொடா்ந்து  புஷ்பாா்ச்சனையுடன் மகா தீபாராதனை .உள்பட பல விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனை முன்னிட்டு, மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் வரை நல்லொழுக்கம், தேசபக்தி, தெய்வபக்தி ஆகியவற்றை வளர்க்கும் விதமாக போட்டிகள் நடத்தப்படும். மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டி, பகவத் கீதை ஒப்புவித்தல் போட்டி, விஷ்ணுசகஸ்ரநாமம் ஒப்புவித்தல் போட்டி, பரதநாட்டியம், குழுநடனம், பாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி என பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான குழந்தைகள் பாரதியார், திருவள்ளுவர், ஸ்ரீ கிருஷ்ணர், ராமர், அனுமன், மீராபாய் உள்ளிட்ட பலவிதமான திருவுருவங்களில் மாறுவேடமிட்டு தங்களது கருத்துக்களை அழகிய மழலை மொழியில் எடுத்து வைத்து பார்வையாளர்களை அசத்தி அற்புதங்கள் செய்தனர். அதில் சிறந்த பங்காற்றிய குழந்தைகளை தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/